Bama Samayal

அங்காய பொடி/Angaya Podi

Bama Narasimhan
Recipe by
Comments Off on அங்காய பொடி/Angaya Podi

அங்காய பொடி

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு                         : 1 கப் (200 கிராம்)
சுண்டைக்காய் வத்தல்      : 1 கப் (100 கிராம் – உப்பு இல்லாத வத்தல்)
வேப்பம்பூ                                 : 1 கப் (100 கிராம்)
பெருங்காயம்                         : 1 சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு                                            : தேவையான அளவு
மிளகாய் வற்றல்                  : 10 லிருந்து 12 எண்ணிக்கை

செய்முறை :

  • ஒரு வாணலியில் dry ஆக ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  • ஆறவைத்து மிக்சியில் முதலில் மிளகாய், உப்பு, பிறகு சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, பெருங்காயம், பருப்பு சேர்த்து பொடிக்கவும்.
  • ரொம்பவும் பவுடர் ஆக இல்லாமல் கொஞ்சம் கரகரப்பாக பொடிக்கவும்.
  • ஆறவைத்து பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.
  • வயிறு உபாதைகளுக்கு சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு கலந்து சாப்பிட குணம் தெரியும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Angaaya podi

 

Ingredients:

 

Tuvar daal                                   : 1 cup (200 gms)

Sundaikkai (turkey berry)       : 1 cup(100 gms – unsalted)

Veppam poo (Neem flower)    : 1 cup (100 gms)

Hing                                             : 1 small piece

Salt                                               : to taste

Red chillies                                 : 10 -12 nos

 

Method :

  • Dry roast tuvar daal, sundaikkaai, veppam poo, red chillies separately in a pan and keep aside.
  • In a mixer jar, first grind red chillies and salt. Later add sundakkaai, veppam poo, hing and daal and grind to a coarse texture (Make sure that the powder is not too fine)
  • Store in an air tight glass container.
  • To cure any digestion and related ailments, mix angaya podi with hot rice and serve with Ghee.
Category: