Bama Samayal

ஆனியன் பக்கோடா / Onion Pakkoda

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஆனியன் பக்கோடா / Onion Pakkoda

ஆனியன் பக்கோடா

 

தேவையான பொருட்கள் :

 

கடலை மாவு                             : 2 கப்

அரிசி மாவு                                  : 1 கப்

வெங்காயம்                                : 1/4 கிலோ (நறுக்கிக்கொள்ளவும்)

பச்சை மிளகாய்                        : 4 Nos (பொடியாக நறுக்கவும்)

மிளகாய் பொடி                         : 1 டேபிள் ஸ்பூன்

நெய்                                                : 1 டேபிள் ஸ்பூன்

உப்பு                                                : ருசிகேற்ப

எண்ணை                                     : பொரித்தெடுப்பதர்க்கு

இஞ்சி                                             : சிறிது பொடியாக நறுக்கவும்

 

செய்முறை :

 

  • கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக பிசறி விட்டு பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி, நெய், மிளகாய் பொடி போட்டு நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக பிசையவும்.
  • எண்ணையை காயவைத்து பக்கோடா போடவும்.
  • நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
  • கடைசியில் கருவேப்பிலையை பொரித்து அதன் மேல் போடவும்