Bama Samayal

ஆலு பரோட்டா / Aalu Paratha

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஆலு பரோட்டா / Aalu Paratha

ஆலு பரோட்டா

 

தேவையான பொருட்கள் :

 

கோதுமை மாவு                  : 1 டம்ளர்

உருளைக் கிழங்கு             : 3 Nos. (வேகவைத்து மசிக்கவும்)

வெங்காயம்                          : 2 Nos. (பொடியாக நறுக்கவும்)

உப்பு                                          : தேவையான அளவு

காரப்பொடி                            : 1 1/2 டி ஸ்பூன் (அவரவர் காரத்திற்கேற்ப)

பச்சை கொத்தமல்லி       : சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

எண்ணை                               : போட்டு எடுக்க

 

செய்முறை :

 

  • கோதுமை மாவுடன் மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய வெங்காயம், உப்பு, காரப்பொடி, கொத்தமல்லி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையவும்.
  • தண்ணீர் தேவை இருக்காது
  • கெட்டியாக பிசைந்து சப்பாத்தி போல் இட்டு தவாவில் போட்டு எண்ணை விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.

 

Note :

  1. மாவு ஊற வேண்டாம். ஊறினால் வெங்காயத்தின் ஈரத்தன்மை மாவை தளர்த்திவிடும். பிறகு இடுவதற்கு சிரமமாக இருக்கும்.
  2. டிபன் பாக்ஸிலும் எடுத்து செல்லலாம், மதியம் காய்ந்து போகாது. Soft ஆகவே இருக்கும்.
  3. மீதிமாவை fridge இல் வைத்தும் பண்ணலாம். மேல் மாவு ஜாஸ்தி இழுக்கும். சற்று பரோட்டா dry ஆக இருக்கும்.