Bama Samayal

ஆவக்காய் ஊறுகாய்/Aavakkaai

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஆவக்காய் ஊறுகாய்/Aavakkaai

ஆவக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :

மாங்காய் : துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும் (வெட்டிய மாங்காய் துண்டங்கள் 6 பங்கு, 6 டம்ளர் என்று வைத்துக்கொள்வோம்.
மிளகாய் பொடி : 1 டம்ளர் (கும்பமாக)
கடுகு பொடி : 1 டம்ளர்
உப்பு : 1 டம்ளர் (தலை தட்டி)
பெருங்காயம் : 1/4 பங்கு (1 L.G. (50g) கட்டியில் 1/4 பாகம் – சிறு துண்டங்களாக்கவும்)
வெந்தயம் : 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி : 2 டி ஸ்பூன்
நல்லெண்ணெய் : 1/4 Kg.

செய்முறை :

– ஒரு பாத்திரத்தில் (ஈரமில்லாத) மிளகாய் பொடி, கடுகு பொடி, உப்பு, வெந்தயம், மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
– பிறகு அதில் நல்லெண்ணையை விட்டு ஒரு கரண்டி காம்பால் கலக்கவும்.
– பொடிகளும் எண்ணையும் நன்றாக சேர வேண்டும்.
– பிறகு மாங்காய் துண்டங்களை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
– மாங்காயும், பொடிகளும் சேர கிளறவும்.
– நன்றாக இறுக்கி மூடி வைக்கவும்.
– இரண்டு நாட்காளில் என்னை மேலிட இருக்கும்.
– அப்படி இல்லையென்றல் இன்னும் சிறிது எண்ணை சேர்த்து கிளறிவைக்கவும்.
– விழுது அதிகம் வேண்டுமானால் கடுகு பொடியை சிறிது அதிகரிக்கவும்.
– சுவையான ஆவக்காய் ஊறுகாய் ரெடி.
– இது வருஷக்கணக்கில் கெடாது. தண்ணீர் படாமல் வைக்கவும்.