Bama Samayal

உப்பு அடை/Uppu Adai

Bama Narasimhan
Recipe by
Comments Off on உப்பு அடை/Uppu Adai

காரடையான் நோன்பு – உப்பு அடை

 

தேவையான பொருட்கள் :

 

அரிசி                                                 : 1 கப் (வறுத்து நைஸ் ரவையாக்கவும்)

கடுகு                                                 : 1 டி ஸ்பூன்

காராமணி                                      : 2 டேபிள் ஸ்பூன் (இதை வறுத்து 2 விசில் வேக வைக்கவும்)

தேங்காய்                                        : 2 டேபிள் ஸ்பூன் (பல் பல்லாக நறுக்கவும்)

பச்சை மிளகாய்                          : காரத்திற்கு ஏற்ப

பெருங்காயம்                               : சிறிது

இஞ்சி                                               : சிறிய துண்டு

உப்பு                                                  : ருசிகேற்ப

எண்ணை                                       : தாளிக்க 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்                                          : 2 1/2 கப்

 

செய்முறை :

 

– ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, ப.மிளகாய், பெருங்காயம், இஞ்சி, தேங்காய், காராமணி எல்லாவற்றையும் தாளித்து அதில் 2 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

– கொதி வந்தவுடன் மாவை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கி ஆறியவுடன், அடையாக தட்டி இட்லி தட்டில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

– உப்பு அடை ரெடி.