Bama Samayal

உப்பு எலுமிச்சை / Uppu Elumichchai

Bama Narasimhan
Recipe by
Comments Off on உப்பு எலுமிச்சை / Uppu Elumichchai

உப்பு எலுமிச்சை

 

தேவையான பொருட்கள் :

 

எலுமிச்சம்பழம்      : 10 (ஒவ்வொரு பழத்தையும் எட்டு துண்டங்களாக நறுக்கவும்)

உப்பு                              : 1 1/2 கைப்பிடி

மஞ்சள் பொடி          : 1 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு ஜாடி அல்லது கல் சட்டியில் நறுக்கிய எலுமிச்சம் பழம், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக குலுக்கி வைக்கவும்.
  • 5 நாள் ஊறிய பிறகு எலுமிச்சம்பழத்தை மட்டும் எடுத்து வெய்யிலில் காயவைக்கவும்.
  • திரும்பவும் அந்த உப்பு ஜலத்திலேயே போடவும்.
  • இதே போல் அந்த உப்பு ஜலம் தீரும் வரையில் பழத்தை போட்டு போட்டு காய வைக்கவும்.
  • உப்பு எலுமிச்சை ரெடி
  • இதே போல் நாரத்தங்காயிலும் போட்டு வைக்கலாம். உப்பு நாரத்தாங்காய் ரெடி.
  • வெய்யில் நாளில் தயிர் சாதத்துடன் உப்பு நாரத்தாங்காய் & உப்பு எலுமிச்சை நாக்குக்கு உணக்கையாக இருக்கும்.