Bama Samayal

உப்பு சீடை/Uppu Seedai

Bama Narasimhan
Recipe by
Comments Off on உப்பு சீடை/Uppu Seedai

உப்பு சீடை

 

தேவையான பொருட்கள் :

 

மாவு அரிசி : 1 மணி நேரம் ஊற வைத்து ஒரு துணியில் நிழல் உணர்தலாக உலர்த்தி நைசாக அரைத்துக்கொள்ளவும்.

உ.பருப்பு – வெறும் வாணலியில் சிவக்க வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

 

அரிசி மாவு                   :               6 பங்கு (6 : 1)

உ.மாவு                            :               1 பங்கு

எள்ளு                               :               1 டி ஸ்பூன் (கோகுலாஷ்டமி ஆனதால்)

உப்பு                                   :               ருசிகேற்ப

வெண்ணை                    :               50 grams. (பெரிய 2 நெல்லிக்காய் அளவு)

கடலை பருப்பு              :               2 டி ஸ்பூன் (ஊறவைத்தது)

எண்ணை                         :               பொரிப்பதற்கு (சுமார் 1/2 Kg to 3/4 Kg.)

பெருங்காயம்                 :               1 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

– அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

– அதனுடன் உ.மாவு, க.பருப்பு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம், போட்டு dry யாக நன்றாக கலக்கவும்.

– பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும்.

– ரொம்பவும் தளர பிசைய வேண்டாம்.

– ஒரு துணியிலோ, அல்லது நியூஸ் பேப்பரிலோ சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.

– உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணையை காய வைத்து எண்ணை கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.

– வெந்த சீடை மிதந்து மேல வரும்.

 

என் அனுபவத்திலிரிந்து சில குறிப்புகள் : 1) மாவை வருக்காவிட்டால் சீடை வெடிக்கும். 2) அரிசியில், எள்ளில் கல் இருந்தால் வெடிக்கும். 3) சீடை பொரிக்க ரொம்ப ஈரத்துடன் போட்டாலும் சில சமயம் வெடிக்கும்.