Bama Samayal

உளுந்து வடை/Ulundhu Vadai – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on உளுந்து வடை/Ulundhu Vadai – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

உளுந்து வடை – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

 

தேவையான பொருட்கள் :                                         தயாரிப்பு நேரம் : 30 நிமிடம்

 

முழு வெள்ளை உளுந்து                                :               1/4 கிலோ

பச்சை மிளகாய்                                                 :               5 Nos.

உப்பு                                                                        :               தேவையான அளவு

எண்ணை                                                             :               தேவையான அளவு

பெருங்காய பவுடர்                                         :               1 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • உளுந்தை 15 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு நன்றாக களைந்து தண்ணீரை வடித்து கிரைண்டரில் போட்டு பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  • தண்ணீரை ஊற்றாமல் தெளித்து அரைக்கவும். கடைசியில் உப்பை சேர்த்து அரைக்கவும்.
  • பந்து போல் மாவு உருண்டு வரும், அப்பொழுது வழித்து எடுத்து விடவும்.
  • வானலியில் எண்ணையை கைய வைத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் கவர் மீதோ வைத்து தட்டி எண்ணையில் பொன்னிறமாக வெந்து எடுக்கவும்.
  • உளுந்து வடை தயார்.