Bama Samayal

எண்ணை கத்தரிக்காய் / Ennai Kathirikkaai

Bama Narasimhan
Recipe by
Comments Off on எண்ணை கத்தரிக்காய் / Ennai Kathirikkaai

எண்ணை கத்தரிக்காய்

 

தேவையான பொருட்கள் :

 

கத்தரிக்காய்                               : 1/2 கிலோ

எண்ணை                                     : தேவையான அளவு

கடுகு                                              : 1 டி ஸ்பூன்

 

பொடிக்க : (1 டி ஸ்பூன் எண்ணை விட்டு வறுத்து பொடிக்கவும்)

 

க.பருப்பு                                        : 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல்                      : 6 Nos

தனியா                                           : 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்                             : சிறிதளவு

தேங்காய் துருவல்                  : 1 டேபிள் ஸ்பூன்

உப்பு                                                : தேவையான அளவு

 

செய்முறை :

 

  • கத்தரிக்காயை நன்றாக அலம்பவும் (காம்பு & பாவாடை எடுக்க வேண்டாம்). சொத்தை பார்த்துக்கொள்ளவும்.
  • நாலாக கீறவும், துண்டமாக நறுக்க வேண்டாம்.
  • கீறிய இடத்தை நிதானமாக பிளந்து பொடித்து வைத்திருக்கும் பொடியை சிறிது சிறிதாக எல்லா கத்தரிக்காயிலும் அடைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளிக்கவும்.
  • பிறகு கத்தரிக்காயின் காம்பு பகுதியை பிடித்து வாணலியில் சுற்றி வைக்கவும்.
  • அடுப்பை நிதானமான தீயில் வைக்கவும்.
  • காயை திருப்பி திருப்பிக் கொடுத்து வதங்க விடவும்.
  • காய் சுருங்க ஆரம்பித்தால் வெந்தது என்று அர்த்தம். கத்தரிக்காய் சைஸ் சிறியது ஆகும், அப்பொழுது வாணலியை இறக்கிக் கொள்ளவும்.
Category: