Bama Samayal

கட்லெட் / Cutlet

Bama Narasimhan
Recipe by
Comments Off on கட்லெட் / Cutlet

கட்லெட்

 

தேவையான பொருட்கள் :

 

உருளை கிழங்கு                    : 4 Nos (வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்)

காரட்                                            : 2 Nos. (பொடியாக நறுக்கவும்)

பீன்ஸ்                                          : 10 Nos. (பொடியாக நறுக்கவும்)

பச்சை கொத்தமல்லி           : சிறிதளவு

எண்ணை                                   : 1/4 கிலோ

உப்பு                                              : தேவையான அளவு

காரப்பொடி                                : 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளை சோளமாவு         : 3 டேபிள் ஸ்பூன் (தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்)

பிரட் க்ரம்ஸ்                            : 4 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு நறுக்கிய காரட், பீன்ஸ் போட்டு வதக்கவும்.
  • பிறகு காரப்பொடி, உப்பு சேர்த்து இறக்கவும்.
  • அதனுடன் வெந்த உருளை கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து விரும்பிய ஷேப்பில் கட்லெட் செய்யவும்.
  • கரைத்த சோளமாவில் கட்லெட்டை நனைத்து பிறகு பிரட் க்ரம்ஸில் புரட்டி ஒரு தவாவில் சுற்றி அடுக்கி எண்ணை விட்டு shallow fry செய்து எடுக்கவும்.
  • சூடான கட்லெட் ரெடி