Bama Samayal

கட் Mango ஊறுகாய் / Cut Mango Pickle

Bama Narasimhan
Recipe by
Comments Off on கட் Mango ஊறுகாய் / Cut Mango Pickle

கட் Mango ஊறுகாய்

 

தேவையான பொருட்கள் :

 

கிளி மூக்கு மாங்காய்        : 2 (பொடியாக நறுக்கவும்)

காரப்பொடி                             : 3 to 4 டேபிள் ஸ்பூன் (அவரவர் காரத்திற்கேற்ப)

உப்பு                                           : தேவையான அளவு

பெருங்காயப்பொடி            : 2 டேபிள் ஸ்பூன்

கடுகு                                          : 1 டி ஸ்பூன்

வெந்தயப்பொடி                   : 1/2 டி ஸ்பூன் (dry யாக வறுத்து பொடிக்கவும்)

ந.எண்ணை                             : 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி                        : 1/2 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.
  • கடுகு பொரிந்ததும் பெருங்காயம் சேர்க்கவும்.
  • பிறகு அடுப்பை அனைத்து விட்டு காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாங்காயில் கொட்டி கலக்கவும்.
  • பிறகு வெந்தயப்பொடி சேர்க்கவும்.
  • பிடித்தவர்கள் துளி வெல்லம் சேர்க்கலாம்.

 

குறிப்பு : இதை 1 நாள் வெளியில் வைக்கலாம். பிறகு Fridge இல் தான் வைத்து எடுக்க வேண்டும். வெயில் நாள் என்பதால் சலிப்பு வாடை வந்து விடும்.