Bama Samayal

கதம்ப சாம்பார்/Kathamba Sambar

Bama Narasimhan
Recipe by
Comments Off on கதம்ப சாம்பார்/Kathamba Sambar

கதம்ப சாம்பார்

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு           : 1 டம்ளர்                    (வேகவைத்து கொள்ளவும்)
மஞ்சள் பொடி           : 1 டி ஸ்பூன்
புளி                                 : 1 எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்)
சாம்பார் பொடி         : 1 1/2 டி ஸ்பூன்
உப்பு                               : தேவையான அளவு

அவரைக்காய்
பரங்கிக்காய்
பூசனிக்காய்
பீன்ஸ்                                                                 (எல்லாம் சேர்த்து 1/4 Kg – நறுக்கி கொள்ளவும்
சர்க்கரை வள்ளி கிழங்கு
காரட்
குடை மிளகாய்
மொச்சை அல்லது பட்டாணி (1 கப்)

வறுத்து அரைக்க :

மிளகாய் வற்றல் – 5
தனிய – 2 டி ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டி ஸ்பூன்                       (வறுத்து அரைத்து கொள்ளவும்)
பெருங்காயம் – 1 துண்டு
வெந்தயம் – 1 டி ஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி

எண்ணை – தேவையான அளவு
தாளிக்க கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை

-நறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.

– பிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

– 10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.

– ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி கடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்