Bama Samayal

குடை மிளகாய் பருப்பு உசிலி / Capsicum Paruppu Usili

Bama Narasimhan
Recipe by
Comments Off on குடை மிளகாய் பருப்பு உசிலி / Capsicum Paruppu Usili

குடை மிளகாய் பருப்பு உசிலி

 

தேவையான பொருட்கள் ;

 

குடை மிளகாய்                        : 5 Nos

துவரம் பருப்பு                           : 200 கிராம்

கடலை பருப்பு                          : 50 கிராம்

சிவப்பு மிளகாய்                       : 8 Nos (மிளகாய் வற்றல்)

உப்பு                                               : தேவைக்கேற்ப

பெருங்காயம்                            : 1 டி ஸ்பூன்

 

தாளிப்பதற்கு :

 

கடுகு                                              : 1 டி ஸ்பூன்

உளுத்தம் பருப்பு                      : 2 டி ஸ்பூன்

சமையல் எண்ணை               : தேவையான அளவு

 

செய்முறை :

 

  • துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • குடை மிளகாயை விதை நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கு கொள்ளவும்.
  • ஊறிய பருப்புகளை பிழிந்து மிக்சியில் போட்டு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்தவுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
  • பருப்பு உசிலி ரெடி.
  • மோர் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Category: