Bama Samayal

குழிப்பணியாரம் / Kuzhi Paniyaaram

Bama Narasimhan
Recipe by
Comments Off on குழிப்பணியாரம் / Kuzhi Paniyaaram

குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு                                             : 1 கப் – 500 ml (அரிசி (3) : உளுந்து (1))
பச்சை மிளகாய்                                     : 3 to 4 Nos. (சிறு துண்டுகளாக நறுக்கவும்)
காரட்                                                           : 2 Nos (துருவிக்கொள்ளவும்)
எண்ணை                                                  : தேவையான அளவு
(தேவையானால்) வெங்காயம்     : 2 Nos (பொடியாக நறுக்கி சேர்க்கலாம்)

செய்முறை :

  • இட்லி மாவில் பச்சை மிளகாய், துருவிய காரட் & (தேவையானால்) வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அடுப்பில் குழிப் பணியாரக் கல்லை போட்டு குழியில் ஒவ்வொரு ஸ்பூன் எண்ணை விடவும்.
  • எண்ணை காய்ந்ததும் மாவை குழியில் பாதி அளவு விட்டு நிதானமான தீயில் வேக விடவும்.
  • ஸ்பூன் காம்பினால் திருப்பி விட்டு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு : உளுந்து பசை அதிகமாக இருந்தால் 4 : 1 ratio கூட போடலாம்