Bama Samayal

சாமை பொங்கல் / Saamai Pongal

Bama Narasimhan
Recipe by
Comments Off on சாமை பொங்கல் / Saamai Pongal

சாமை பொங்கல்

 

தேவையான பொருட்கள் : 

 

சாமை அரிசி                               : 1 டம்ளர்

ப.பருப்பு                                         : 1 குழிக்கரண்டி

மிளகு                                              : 1 டி ஸ்பூன்

சீரகம்                                               : 1 டி ஸ்பூன்

பெருங்காயப்பொடி                  : 1/2 டி ஸ்பூன்

உப்பு                                                 : தேவையான அளவு

இஞ்சி                                              : 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)

நெய்                                                 : அவரவர் விருப்பம் (100 கிராம்)

கருவேப்பிலை                           : 1 ஆர்க்கு

 

செய்முறை :

 

  • அரிசி, பருப்பு, இரண்டையும் களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில் வைக்கவும்.
  • பிறகு ஒரு கரண்டியால் மசிக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு நெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி தாளித்து கடைசியில் பெருங்காயப்பொடி, கருவேப்பிலை சேர்த்து பொங்கலில் கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்.
  • பாதி எண்ணை (sunflower oil) மற்றும் பாதி நெய் சேர்த்தும் பண்ணலாம்.