Bama Samayal

சுய்யம்/Suyyam

Bama Narasimhan
Recipe by
Comments Off on சுய்யம்/Suyyam

சுய்யம்

தேவையான பொருட்கள் :

தேங்காய் : 1 (துருவிக்கொள்ளவும்)
வெல்லம் : 300 கிராம்
ஏலக்காய் : 4 Nos (பொடிக்கவும்)
எண்ணை : 1/2 கிலோ (பொரிப்பதற்கு)

செய்முறை – பூரணம் :

– வாணலியில் தேங்காய், வெல்லம், சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
– இரண்டும் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

செய்முறை – மேல் மாவு

ப.அரிசி : 1 ஆழாக்கு ஒரு மணி நேரம்
முழு உளுத்தம் பருப்பு : 1/4 ஆழாக்கு ஊறவைக்கவும்

– இரண்டையும் சேர்த்து ஒரு கல் உப்பு போட்டு வழு வழுப்பாக அரைக்கவும்.
– மாவு பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

செய்முறை – சுய்யம்

– வாணலியில் எண்ணையை காயவைக்கவும்.
– பூரணத்தை சிறிய நெல்லிக்காய் அளவு உருட்டி கொள்ளவும்.
– உருண்டையை மாவில் தோய்த்து (பஜ்ஜி போல்) எண்ணையில் போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.

Category: