Bama Samayal

சென்னா புலாவ் / Chenna Pulao

Bama Narasimhan
Recipe by
Comments Off on சென்னா புலாவ் / Chenna Pulao

சென்னா புலாவ்

 

தேவையான பொருட்கள் :

 

பாசுமதி அரிசி                           : 2 கப்

வெங்காயம்                               : 2 (நீள நீளமாக நறுக்கிக்கொள்ளவும்)

மிளகாய் பொடி                        : 2 to 3 டி ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட்          : 1 டி ஸ்பூன்

ப.கொத்தமல்லி                      : 1/2 கட்டு (நறுக்கிக்கொள்ளவும்)

கிராம்பு                                         : 2 Nos

ஏலக்காய்                                    : 4 Nos

பட்டை                                          : 1 துண்டு

சென்னா                                       : 1/2 கப் (இரவு ஊற வைக்கவும்)

தக்காளி                                        : 2 (நீளமாக நறுக்கிக்கொள்ளவும்)

உப்பு                                                : தேவையான அளவு

புதினா                                            : 1/2 கட்டு (இலையாக எடுத்து அலம்பிக்கொள்ளவும்)

தயிர்                                               : 1/2 கப்

எண்ணை                                     : 4 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

– சென்னாவுடன் சிறிது உப்பு சேர்த்து 3 விசில் கொடுத்து வேக விடவும்.

– பாசுமதி அரிசியை களைந்து 2 1/2 கப் தண்ணீர் விட்டு 1/2 மணி நேரம் ஊற விடவும்.

– ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை காய்ந்தவுடன் கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளிக்கவும்.

– பிறகு வெங்காயம், போட்டு வதங்கியதும், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

– பின்னர் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதி வந்தவுடன் ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.

– 1 விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

– தயிர் பச்சிடியுடன் நன்றாக இருக்கும்.

Category: