Bama Samayal

சொஜ்ஜி அப்பம்/Sojji Appam

Bama Narasimhan
Recipe by
Comments Off on சொஜ்ஜி அப்பம்/Sojji Appam

சொஜ்ஜி அப்பம்

தேவையான பொருட்கள் (மேல் மாவு செய்ய) :

மைதா மாவு : 1/2 கிலோ
உப்பு : 1 சிட்டிகை
தண்ணீர் : தேவையான அளவு (மாவு பிசைய)
எண்ணை : 3 டேபிள் ஸ்பூன் (மாவு பிசைய)
எண்ணை : 1/2 கிலோ (பொரிப்பதற்கு)

செய்முறை :

– மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
– பிசைந்த மாவுடன் 3 டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு காற்று புகாமல் அரை மணியிலிருந்து ஒரு மணிவரை மூடி வைக்கவும்.

தேவையான பொருட்கள் (சொஜ்ஜி செய்ய) :

ரவை : 1/4 கிலோ
வெல்லம் : 400 கிராம் (தூள் செய்யவும்)
ஏலக்காய் : 3 Nos. (பொடி செய்யவும்)
நெய் : 5 டி ஸ்பூன்
தண்ணீர் : 2 டம்ளர்

செய்முறை :

– 2 டி ஸ்பூன் நெய் விட்டு ரவையை 5 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
– 1 1/2 டம்ளர் தண்ணீரில் வெள்ளத்தை கரைத்து வடிகட்டவும்.
– மீதி 1/2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து ரவையில் கொட்டி கிளறவும்.
– ரவை வெந்தவுடன், வெல்லத் தண்ணீரை அதில் சேர்த்து கிளறவும்.
– மீதி நெய்யை விட்டு ஏலபொடி, சேர்த்து நன்றாக கிளறி கெட்டியானவுடன் இறக்கவும்.

சொஜ்ஜி அப்பம் செய்முறை :

– முதலில் ஒரு வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டிலோ எண்ணை தடவி, மைதாமாவில் சிறிது எடுத்து தட்டி, நடுவில் சொஜ்ஜி பூரணத்தை வைத்து மூடி, அதிரசம் போல் தட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
– சொஜ்ஜி அப்பம் ரெடி.

– ஸ்ரார்ததிற்கு செய்வதாக இருந்தால் வெல்லம் சேர்க்கவும்,
– சாதரணமாக செய்வதாக இருந்தால் சர்க்கரை சேர்த்து சொஜ்ஜி அப்பம் செய்யலாம்.

Category: