Bama Samayal

ஜவ்வரிசி வடாம் / Javvarisi Vadam

Bama Narasimhan
Recipe by
Comments Off on ஜவ்வரிசி வடாம் / Javvarisi Vadam

ஜவ்வரிசி வடாம்

 

தேவையான பொருட்கள் :

 

ஜவ்வரிசி                                       : 1 கிலோ

எலுமிச்சம் பழம்                        : 3 Nos. (medium size – பிழியவும்)

பெருங்காயப்பொடி                  : 2 டி ஸ்பூன்

பால்                                                  : 1/2 டம்ளர் (தேவை பட்டால்)

சீரகம்                                               : 3 டி ஸ்பூன் (தேவை பட்டால்)

ஓமம்                                               : 3 டி ஸ்பூன் (தேவை பட்டால்)

 

அரைத்துக்கொள்ளவும் :

 

பச்சை மிளகாய்                         : 100 கிராம்

உப்பு                                                 : 1 1/2 கைப்பிடி

 

செய்முறை :

 

  • ஜவ்வரிசியை முதல் நாள் இரவு ஊறவைக்கவும் (ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் விடவும்)
  • மறு நாள் பத்து லிட்டர் குக்கரில் பாதி அளவு தண்ணீர் விட்டு நீர் கொதி வந்தவுடன், ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் போட்டு கிளறவும்.
  • ஜவ்வரிசி வெந்தவுடன் அரைத்து வைத்த மிளகாய், உப்பு கலவையை அதில் சேர்க்கவும்.
  • பிறகு, பெருங்காயப்பொடி சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறை ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  • 1/2 டம்ளர் பால் விட்டால் வெளுப்பாக இருக்கும்.
  • பிளாஸ்டிக் ஷீட்டில் கரண்டியால் எடுத்து round round ஆக விடவும்.
  • பிடித்தால் சீரகம் அல்லது ஓமம் சேர்த்தும் கலந்து வடாம் இடலாம்