Bama Samayal

தக்காளி ரசம் / Thakkaali Rasam – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

Bama Narasimhan
Recipe by
Comments Off on தக்காளி ரசம் / Thakkaali Rasam – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

தக்காளி ரசம் – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

 

தேவையான பொருட்கள் :

 

புளி                                        : 1 எலுமிச்சை அளவு

து.பருப்பு                             : 1 சிறிய கப் (வேக வைக்கவும்)

உப்பு                                      : தேவையான அளவு

பெருங்காயம்                     : 1 சிறிய துண்டு

தக்காளி                                : 2 Nos. (பொடியாக நறுக்கவும்)

பச்சை கொத்தமல்லி       : சிறிது

கருவேப்பிலை                  : சிறிது

பச்சை மிளகாய்                 : 2 Nos (கீறிக்கொள்ளவும்)

கடுகு                                     : 1 டி ஸ்பூன்’

சீரகம்                                    : 1 டி ஸ்பூன்

நெய்                                      : 1 டேபிள் ஸ்பூன்

 

பொடிக்க : (கரகரப்பாக மிக்சியில் பொடிக்கவும்)

 

மிளகாய் வற்றல்                : 4 Nos.

மிளகு                                    : 1 டி ஸ்பூன்

சீரகம்                                    : 1 டி ஸ்பூன்

தனியா                                  : 1 டி ஸ்பூன்

 

செய்முறை :

 

  • 1 டம்ளர் தண்ணீரில் புளியைக்கரைத்து அதனுடன் தக்காளி, பெருங்காயம், உப்பு, பச்சைமிளகாய், சேர்த்து கொதிக்க விடவும்.
  • வெந்த பருப்பை மத்தினால் நன்றாக சிலுப்பி, ரசத்தில் விடவும்.
  • ரசப்பொடியையும் சேர்த்து நன்றாக பொங்கி வந்தவுடன் இறக்கி 1 டேபிள் ஸ்பூன் நெய்யில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
  • கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.