Bama Samayal

தட்டை/Thattai

Bama Narasimhan
Recipe by
Comments Off on தட்டை/Thattai

தட்டை

தேவையான பொருட்கள் :

பச்சரிசி : 3 டம்ளர் (கும்பமாக, 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழல் உலர்தலாக உலர்த்தி மாவாக அரைத்துக்கொள்ளவும்)
உ.பருப்பு : 1/2 டம்ளர் (சிவக்க வறுத்து அரைக்கவும் – ratio 3 : 1/2
உப்பு : தேவையான அளவு
வெண்ணை : 1 எலுமிச்சை அளவு
காரப்பொடி : 3 டி ஸ்பூன் (காரம் அவரவர் தேவைகேற்ப)
பெருங்காயப்பொடி : 1 டி ஸ்பூன்
கடலை பருப்பு : 3 டேபிள் ஸ்பூன். (ஊறவைத்துக்கொள்ளவும்)
கருவேப்பிலை : 2 ஆர்க்கு
எண்ணை : 1/2 கிலோ
எள் : 2 டி ஸ்பூன் (கோகுலாஷ்டமி ஆனதால்)

செய்முறை :

– அரிசிமாவை சூடு வரும்வரை (5 நிமிடம்) வறுத்துக்கொள்ளவும்.
– அதனுடன் உ.மாவு, வெண்ணை, உப்பு, எள், பெருங்காயம், காரப்பொடி, க.பருப்பு பிழிந்து போட்டுக்கொள்ளவும்.
– கருவேப்பிலை பிய்த்துப்போட்டு நன்றாக கலந்து பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
– பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணை தடவி நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து தட்டவும்.
– எண்ணையை வாணலியில் காயவைத்து தட்டைகளை அதில் போட்டு நிதானமான தீயில் வேகவைத்து எடுத்தால், தட்டை ரெடி.