Bama Samayal

தனிக்கூட்டு / Thani Koottu – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on தனிக்கூட்டு / Thani Koottu – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தனிக்கூட்டு – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

க.பருப்பு                                      : 200 grms (100 + 100)
புளி                                                : 1 எலுமிச்சை அளவு
உப்பு                                              : தேவையான அளவு
கடுகு                                             : 1 டி ஸ்பூன்
வெல்லம்                                   : 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி                          : 1/2 டி ஸ்பூன்
பெருங்காயம்                          : 1 சிறிய துண்டு
மிளகாய் வற்றல்                  : 10 Nos (காரத்திற்கேற்ப)
எண்ணை                                  : 1 1/2 குழி கரண்டி
தேங்காய்                                  : 1 மூடி (துருவியது)
கருவேப்பிலை                      : 1 ஆர்க்கு

செய்முறை :

  •  வாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகாய் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
  •  கடலை பருப்பில் பாதியை வேக வைத்துக்கொள்ளவும்.
  • புளியை கரைத்து உப்பு, மஞ்சள் பொடி, சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு பொடித்த மிளகாயை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு, வெந்த கடலை பருப்பை சேர்க்கவும்.
  • அதனுடன் வெல்லம், பெருங்காயம், சேர்த்து கொதித்தவுடன், இறக்கி மீதமுள்ள எண்ணெயில் கடுகு போடவும்.
  • கடுகு நன்றாக பொரிந்தவுடன், மீதி பாதி கடலை பருப்பு சேர்க்கவும்.
  • பிறகு தேங்காய் சேர்த்து சிவந்ததும் கருவேப்பிலை சேர்த்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் சேர்க்கவும்.
  • இதுதான் தனிகூட்டு. இது கொஞ்சம் புளிப்பு, காரம், இனிப்புடன் இருக்கும்.