Bama Samayal

தவலை வடை/Thavalai Vadai

Bama Narasimhan
Recipe by
Comments Off on தவலை வடை/Thavalai Vadai

தவலை வடை

 

தேவையான பொருட்கள் :

 

து.பருப்பு                         : 1 கப்

க.பருப்பு                          : 1 கப்      ஊறவைக்கவும்

உ.பருப்பு                         : 1 கப்

ப.பருப்பு                          : 1 கப் (தனியாக ஊறவைக்கவும்)

புழுங்கல் அரிசி          : 1 கப் (ஊறவைக்கவும்)

மிளகாய் வற்றல்       : 8 to 10 (அவரவர் தேவைக்கு)

உப்பு                                  : ருசிகேற்ப

கருவேப்பிலை           : சிறிது

பெருங்காயம்              : 1 சிறிய துண்டு

இஞ்சி                               : 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)

தேங்காய்                       : 1/2 மூடி (பல் பல்லாக நறுக்கவும்)

எண்ணை                       : வடை தட்டி எடுக்க தேவையான அளவு

 

செய்முறை :

 

– புழுங்கல் அரிசியுடன் பருப்பு வகைகளை சேர்த்து (ப.பருப்பு தவிர), மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

– மாவுடனும் நறுக்கிய தேங்காய் சேர்த்து ப.பருப்பை நீர் இல்லாமல் பிழிந்து போட்டு துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து வடையாக தட்டி பொறிக்கவும்.

– ஓட்டை போட வேண்டாம்.

– அவரவர் தேவை மற்றும் ருசிகேற்ப கருவேப்பிலையும் கிள்ளி போட்டு மாவுடன் பிசைந்து கொள்ளலாம்.