Bama Samayal

தாளக குழம்பு/Thaalaga Kuzhambu

Bama Narasimhan
Recipe by
Comments Off on தாளக குழம்பு/Thaalaga Kuzhambu

தேவையான பொருட்கள் :

நாட்டு காய்கறிகள் :

அவரைக்காய் : 10 Nos
பூசணிக்காய் : நறுக்கியது ஒரு சிறிய கப்
பரங்கிக்காய் : நறுக்கியது ஒரு சிறிய கப்
கத்திரிக்காய் : 3 Nos
முருங்கைக்காய் : 1 No
புளி : 1 எலுமிச்சை அளவு
உப்பு : தேவையான அளவு
மஞ்சள் பொடி : சிறிது
தாளிக்க : கடுகு மற்றும் கருவேப்பிலை

வறுத்து பொடிக்க :

து.பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
எள்ளு : 3 டேபிள் ஸ்பூன்
அரிசி : 1 டி ஸ்பூன்
மிளகாய் வற்றல் : 10 Nos (காரத்திற்கு ஏற்ப)
தேங்காய் துருவல் : 1 மூடி தேங்காய் (துருவியது)
(இந்த ஐந்து சாமான்களையும் வறுத்து பொடிக்கவும்)

செய்முறை :

– காய்கறிகளை 5 நிமிடம் 1/2 டம்ளர் சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
– பிறகு அதில் புளியை கரைத்து (2 டம்ளர் தண்ணீர்) காய்களுடன் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
– புளி பச்சை வாசனை போடவுடன் பொடித்துள்ள பொடியை சேர்க்கவும்.
– 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்.
– எள்ளின் மணத்துடன் இந்த குழம்பு இருக்கும்.
– சிலர் குடும்ப வழக்கத்தில் ஆடி மாதத்தில் மஞ்சள் பொங்கல் தாளக குழம்பு என்று பண்ணுவார்கள். அதுதான் இந்த குழம்பு.