Bama Samayal

தேங்காய் சாதம் / Thengaai Saadham – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on தேங்காய் சாதம் / Thengaai Saadham – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேங்காய் சாதம் – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

அரிசி                                        : 1/2 கிலோ

வறுக்க :

தேங்காய்                               : 1 No. (துருவிக்கொள்ளவும்)
கடுகு                                        : 1 டி ஸ்பூன்’
உ.பருப்பு                                : 2 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி          : 1 டி ஸ்பூன்
உப்பு                                         : தேவையான அளவு’
மிளகாய் வற்றல்               : 5 Nos.
எண்ணை                               : 1 குழி கரண்டி

செய்முறை :

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உ.பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, சேர்த்து வதக்கவும்.
  • சிவந்தவுடன், தேங்காய் சேர்த்து வறுத்து கடைசியில் உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • சாதத்தை வடித்து ஆறவைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு வறுத்து தேங்காய், சேர்த்து கலந்தால் தேங்காய் சாதம் ரெடி.
  • தேவையானால் முந்திரி பருப்பும் வறுத்து சேர்க்கலாம்