Bama Samayal

தேன் குழல்/Then Kuzhal

Bama Narasimhan
Recipe by
Comments Off on தேன் குழல்/Then Kuzhal

தேன் குழல்

 

தேவையான பொருட்கள் :

 

பொட்டுக்கடலை         : 1/2 Kg                                 இவற்றை 10 நிமிடம் வெறும் வாணலியில்

க.பருப்பு                             : 1/4 Kg                             வறுத்து மிஷினில் அரைத்துக்கொள்ளவும்.

ப.பருப்பு                             : 1/4 Kg

 

ப.அரிசி                               : 1 Kg (இதையும் மாவாக அரைக்கவும் – அரிசியை களைந்து காயவைத்து அரைத்தால் தேன் குழல் சிவக்காமல் இருக்கும் – அவரவர் சௌகரியம்

சீரகம்                                  : 1 டி ஸ்பூன்.

உப்பு                                     : தேவைகேற்ப

வெண்ணை                     : 1 எலுமிச்சை அளவு.

எண்ணை                          : பொரிப்பதற்கு தேவையான அளவு.

பெருங்காயப்பொடி    : 1 டி ஸ்பூன்

தண்ணீர்                            : தேவைகேற்ப

 

செய்முறை :

 

– அரிசி மாவு : 3 டம்ளர் (ratio – 3 : 1)

– வறுத்து அரைத்த மாவு : 1 டம்ளர்

– சீரகம், பெருங்காய பவுடர், உப்பு, வெண்ணை எல்லாவற்றையும் மாவில் நன்றாக கலந்து விட்டு பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

– எண்ணை காய்ந்ததும் பிசைந்த மாவை அச்சில் போட்டு பிழிந்து அடுப்பை நிதானமாக எரிய வைத்து வெந்து எடுக்கவும்.

 

குறிப்பு : வறுத்து அரைத்த மாவை வைத்து ஒரு tip :

 

– அரிசி மாவு 3 : 1 வறுத்த மாவு

– இதில் எள் சேர்த்து சாதா அச்சில் பிழிந்தால் குழந்தைகளுக்கு நாக்கில் குத்தாமல் இருக்கும்.

– முள்ளு அச்சில் பிழிந்தால் “முத்துச்சரம்”.

– இந்த மாவில் காரப்பொடி சேர்த்து ரிப்பன் அச்சில் பிழிந்தால் “ரிப்பன்”.

– கடலை பருப்பு ஊற வைத்து பிழிந்து போட்டு மாவுடன் பிசைந்து தட்டினால் “தட்டை”.

– இவை எல்லாவற்றையும் செய்ய, எல்லா சாமான்களும் முதலில் கொடுத்த அளவுதான்.