Bama Samayal

நார்த்தங்காய் பச்சடி / Naarthangaai Pachidi

Bama Narasimhan
Recipe by
Comments Off on நார்த்தங்காய் பச்சடி / Naarthangaai Pachidi

நார்த்தங்காய் பச்சடி

 

தேவையான பொருட்கள் :

 

நார்த்தங்காய்          : 3 Nos. (சிறிய துண்டங்களாக நறுக்கவும்)

பச்சை மிளகாய்     : 10 Nos. (கீறி வைத்துக்கொள்ளவும்)

நல்லெண்ணெய்   : 5 டேபிள் ஸ்பூன்

கடுகு                           : 1 டி ஸ்பூன்

மஞ்சள் பொடி         : 1/4 டி ஸ்பூன்

புளி                               : 1 எலுமிச்சை அளவு

வெல்லம்                  : 1 நெல்லிக்காய் அளவு

உப்பு                             : தேவையான அளவு

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் கொடுத்திருக்கும் அளவு நல்லெண்ணையை விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போடவும்.
  • கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய், நார்த்தங்காய் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு புளியை கெட்டியாக கரைத்து அதில் சேர்க்கவும்.
  • 5 நிமிடம் கொதித்தவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவும்.