Bama Samayal

நெல்லிக்காய் ஊறுகாய் / Nellikkaai Oorugaai

Bama Narasimhan
Recipe by
Comments Off on நெல்லிக்காய் ஊறுகாய் / Nellikkaai Oorugaai

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய்                         : 1/2 கிலோ (துருவிக்கொள்ளவும்)
மிளகாய் பொடி                      : 100 கிராம்
பெருங்காயம்                          : 1 கொட்டைபாக்கு அளவு (சிறிய)
உப்பு                                             : ருசிகேற்ப
நல்லெண்ணெய்                   : 1 சிறிய கப்
கடுகு                                           : 1 டி ஸ்பூன்
மஞ்சள் பொடி                        : 1/2 டி ஸ்பூன்

செய்முறை – (1 வது முறை) :

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
  • பிறகு துருவிய நெல்லிக்காயை போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
  • எண்ணை பிரிந்து வரும் பொழுது, பிடித்தால் சிறிது வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

செய்முறை – (2 வது முறை) :

  • எல்லாம் அதே அளவு.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
  • முழு நெல்லிகாயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து 10 நிமிடம் கழித்து கொட்டையை நீக்கவும்.
  • பிறகு கொட்டை நீக்கிய நெல்லிக்காயை போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
  • எண்ணை பிரிந்து வரும் பொழுது, பிடித்தால் சிறிது வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.