Bama Samayal

பயத்தம் பருப்பு பாயசம்/Payatham Paruppu Paayasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on பயத்தம் பருப்பு பாயசம்/Payatham Paruppu Paayasam

பயத்தம் பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள் :

ப.பருப்பு : 100 கிராம்
வெல்லம் : 150 கிராம்
பால் : 50 ML (காய்ச்சியது)
ஏலக்காய் : 2 பொடிக்கவும்
முந்திரி : அவரவர் சௌகரியம்
நெய் : முந்திரி வறுக்க

செய்முறை :

– பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் 2 நிமிடம் வறுக்கவும்
– பிறகு cooker or pressure pan இல் 1 டம்ளர் தண்ணீரில் பருப்பை சேர்க்கவும்.
– 2 விசில் விட்டு இறக்கவும்
– வெல்லத்தில் சிறிது (1/2 டம்ளர்) தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.
– அதை பருப்புடன் சேர்த்து மத்தால் சிலுப்பவும் (பாயசம் சேர்ந்தார் போல் இருக்கவும்)
– அடுப்பில் வைத்து வெல்லம் பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
– இறக்கி பால், ஏலப்பொடி, முந்திரி சேர்த்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யவும்.

Category: