Bama Samayal

பருப்புப்பொடி/Paruppu Podi

Bama Narasimhan
Recipe by
Comments Off on பருப்புப்பொடி/Paruppu Podi

பருப்புப்பொடி

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு : 200 கிராம்
கடலை பருப்பு : 150 கிராம்
பாசிப்பருப்பு : 100 கிராம்
எள் : 50 கிராம்
பெருங்காயம் : 1 சிறு துண்டு
உப்பு : தேவையான அளவு
மிளகாய் வற்றல் : 10 லிருந்து 12 எண்ணிக்கை

செய்முறை :

– ஒரு வாணலியில் dry ஆக எல்லா பருப்புகளையும் வறுத்துக்கொள்ளவும்.
– பிறகு எள்ளையும் நன்றாக பொறியும்படி வறுக்கவும்.
– கடைசியில் மிளகாய் உப்பையும் வறுக்கவும்.
– மிக்சியில் மிளகாய், உப்பு, பருப்பு வகைகள், கடைசியில் எள் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
– இதுவே பருப்புப்பொடி

Category: