Bama Samayal

பருப்புப்போளி/Parupu Boli

Bama Narasimhan
Recipe by
Comments Off on பருப்புப்போளி/Parupu Boli

பருப்புப்போளி

தேவையான பொருட்கள் : (சுமார் 18 போளி வரும்)

கடலை பருப்பு                              : 1 டம்ளர் (200 கிராம்)
வெல்லம்                                        : 1 1/2 டம்ளர்
ஏலப்பொடி                                     : 1 டி ஸ்பூன்.
தேங்காய்                                        : 1/2 மூடி (துருவிக்கொள்ளவும்)
மைதா மாவு                                  : 1 1/2 டம்ளர்
உப்பு                                                   : 1 சிட்டிகை (வெறும் மாவு பிசைய கூடாது)
yellow கலர் or மஞ்சள் பொடி  : 1/2 டி ஸ்பூன்.
நெய்                                                   : போளி வெந்து எடுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை – (பூரணம் செய்ய) :

  • – கடலை பருப்பை வாசனை வரும் அளவு வறுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும்.
  • பருப்பு மூழ்கும் அளவு வெந்நீர் விட்டால் போதும் (ஒரு மணி நேரம் ஊற விடவும்).
  • கிள்ளு பதத்திற்கு ஊறி இருக்கும்.
  • பிறகு நீரை வடித்து மிக்ஸி or கிரைண்டரில் கடலை பருப்பு 3/4 பாகம் மசிந்தவுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • சிறிது தளர்த்தியாக இருக்கும், பயப்பட வேண்டாம்.
  • அதை எடுத்து ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறினால் கெட்டியாகி விடும்.
  • பூரணம் ரெடி.

 

மேல் மாவு செய்முறை :

  • ஒரு தட்டில் மைதா மாவை போட்டு அதனுடன் சிட்டிகை உப்பு, கலர் பவுடர் or மஞ்சள் பொடி சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சிறிது எண்ணை விட்டு மாவை காற்று புகாமல் 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
  • மேல் மாவு ரெடி.

போளி செய்முறை :

  • பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  • மேல் மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் பரத்திக் கொண்டு, பூரண உருண்டையை நடுவில் வைத்து மேல் மாவை நேன்றாக இழுத்து மூடவும்.
  • பிறகு அதை சப்பாத்தி போல் மைதா மாவை தொட்டுக்கொண்டு இட்டுக்கொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இரு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால் போளி ரெடி.
  • கருகவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

Paruppupoli

Ingredients :

 

Bengal gram dal                                          : 1 cup (200 gms)

Jaggery (shredded)                                    : 1 1/2 Cups

Elaichi powder                                            : 1 teaspoon

Coconut (Grated)                                        : 1/2 coconut

Maida (all purpose flour)                          : 1 1/2 Cups

Salt                                                                 : a pinch

Turmeric powder                                        : 1/2 tea spoon

Ghee                                                              : To cook poli – about two cups

Method :

 

  1. Pooranam (Stuffing)
  • Dry roast the Bengal gram dal till you get a fine aroma.
  • Add the dry roasted dal to boiling water and keep closed, soaking for an hour (water just about to immerse the dal)
  • Strain and add to a mixer-grinder jar and pulsate. When it is half ground, add jaggery, coconut, elaichi powder and grind to a fine paste
  • May be a little diluted in texture,that would be fine. Add ghee and the ground mixture to a pan and saute for a few seconds. The texture would thicken
  • The stuffing (pooranam) is now ready

 

  1. Dough
  • In a pan, add maida, turmeric powder, salt and mix well.
  • Add water and knead (consistency like that of chapathi dough for making roti)
  • Smear some cooking oil so that the dough is non sticky.
  • Let the dough stay for half an hour in an air tight container.

 

 

  1. Makingthe poli
  • Divide the pooranams into equal portions of small balls (one big lemon size each)
  • Take a small portion of the dough and spread widely on your palm.
  • Take one ball of the stuffing, place it inside the dough (spread on your palm), close it from all corners (the stuffing should be inside and the dough would be covering it entirely)
  • Smear some dry flour on top of the stuffed dough and roll it just like how you make rotis.
  • Heat a tawa and place the rolled poli on it smearing ghee on both sides turning it over every minute till it cooks well (golden brown on both sides)

 Poli is now ready to serve

Category: