Bama Samayal

பாலக் தால் /Paalak Dhal

Bama Narasimhan
Recipe by
Comments Off on பாலக் தால் /Paalak Dhal

பாலக் தால் (Paalak Dhal)

தேவையான பொருட்கள் :

பாலக் கீரை : 1 கட்டு (ஆயிந்து பொடியாக நறுக்கவும்)
துவரம்பருப்பு : 1 குழி கரண்டி (வேக வைத்துக்கொள்ளவும்)
சீரகம் : 1 டி ஸ்பூன்.
உப்பு : தேவையான அளவு
மிளகாய் பொடி : 1 டி ஸ்பூன்.
பெருங்காயம் : சிறிது
இஞ்சி : சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கடுகு, நெய் : 1 டி ஸ்பூன்

செய்முறை :

– கீரையை நன்றாக மண் போக அலம்பி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
– அதனுடன் சிட்டிகை sugar (கீரை நிறம் மாறாதிருக்க), சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
– அதனுடன், இஞ்சி, மிளகாய் பொடி சேர்த்து வெந்த பருப்பையும் சேர்க்கவும்.
– எல்லாம் சேர்ந்து வெந்தவுடன், ஒரு மத்தினால் மசித்தால் சேர்ந்தார்போல் இருக்கும்.
– நெயில் கடுகு தாளிக்கவும் (பூண்டு பிடித்தவர்கள் சேர்க்கலாம்).
– வத்தகுழம்பு சாதத்துடன் சாப்பிட ரம்யமாக இருக்கும்.

Category: