Bama Samayal

பால் பாயசம்/Paal Paayasam

Bama Narasimhan
Recipe by
Comments Off on பால் பாயசம்/Paal Paayasam

பால் பாயசம்

தேவையான பொருட்கள் :

பால் : 1 லிட்டர்
ப.அரிசி : 1 கைப்பிடி (பாஸ்மதி அரிசி, மணமாக இருக்கும்)
சர்க்கரை : 1 சிறிய டம்ளர் (100 டு 150 கிராம்)

செய்முறை :

– அரிசியை களைந்து 1/2 லிட்டர் பாலுடன் குக்கரில் 4 விசில் விடவும்.
– பிறகு மீதி பாலை விட்டு கொதி வந்தவுடன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
– பால் பாதியாக குறுகியவுடன் பாலின் நிறம் மாறியிருக்கும், அப்பொழுது இறக்கவும்.
– பாயசம் ரெடி
குறிப்பு : பாதி mild maid பாதி பாலும் சேர்த்தும் செய்யலாம். ஏலக்காய், முந்திரி அவசியம் இல்லை. தேவையானால் சேர்க்கலாம், தவறு இல்லை.

Category: