Bama Samayal

பிட்ளை / Pitlai – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

Bama Narasimhan
Recipe by
Comments Off on பிட்ளை / Pitlai – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

பிட்ளை – (சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு)

 

தேவையான பொருட்கள் :

 

வெ.கடலை or பட்டாணி            : 1 சிறிய கப் (முதல் நாள் இரவு ஊறவைக்கவும்)

புளி                                                        : 1 எலுமிச்சை அளவு

உப்பு                                                      : தேவையான அளவு

பச்சை கத்தரிக்காய்                      : 6 Nos. (சிறிய துண்டுகளாக நறுக்கவும் – பொட்டி பொட்டியாக)

து.பருப்பு                                             : 100 கிராம்

மஞ்சள் பொடி                                  : 1/2 டி ஸ்பூன்

கருவேப்பிலை                                : 2 ஆர்க்கு

கடுகு                                                     : 1 டி ஸ்பூன்

எண்ணை                                            : 2 டேபிள் ஸ்பூன்

 

 

வறுத்து பொடிக்கவும் :

 

மிளகாய் வற்றல்                            : 8 Nos.

தனியா                                                 : 1 டேபிள் ஸ்பூன்

க.பருப்பு                                              : 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்                                   : 1 துண்டு

தேங்காய் துருவல்                        : 1/2 மூடி

 

செய்முறை :

 

  • து.பருப்பு, கடலை, இரண்டையும் குக்கரில் மஞ்சள் பொடி சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் கொடுத்து இறக்கவும்.
  • புளியைக் கரைத்து அதனுடன் கத்தரிக்காய், உப்பு சேர்த்து வேக விடவும்.
  • கத்தரிக்காய் வெந்தவுடன் வெந்த பருப்பு, வறுத்து பொடித்த பொடி சேர்க்கவும்.
  • எல்லாம் சேர்ந்து வந்தவுடன் இறக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.

 

  • குறிப்பு : புதிதாக அரைத்திருந்தால் சாம்பார் பொடி போட்டும் பண்ணலாம். தினம் உபயோகப்படுத்தும் பொடியை சுமங்கலி பிரார்த்தனைக்கு எடுக்க வேண்டாம்.

 

  • சில வீடுகளில் கத்தரிக்காய் சேர்க்ககூடாது என்றால் பாகற்காயில் பண்ணலாம்.