Bama Samayal

பீட்ரூட் ஹல்வா / Beetroot Halwa

Bama Narasimhan
Recipe by
Comments Off on பீட்ரூட் ஹல்வா / Beetroot Halwa

பீட்ரூட் ஹல்வா

 

தேவையான பொருட்கள் :

 

பீட்ரூட்                            : 1/4 கிலோ (துருவிக்கொள்ளவும்)

சர்க்கரை                        : 200 கிராம்

பால்                                  : 100 ml.

ஏலக்காய்                       : 3 (பொடித்துக்கொள்ளவும்)

முந்திரி                           : 10 Nos. (நெய்யில் வறுக்கவும்)

நெய்                                  : தேவையான அளவு (150 கிராம் to 200 கிராம்)

 

செய்முறை :

 

  • பீட்ரூட் துருவலுடன் பால் சேர்த்து குக்கரில் 1 விசில் விட்டு இறக்கவும்.
  • ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு வெந்த பீட்ரூட் கலவையை சேர்த்து கிளறவும்.
  • பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  • இரண்டும் சேர்ந்து வரும் பொழுது இன்னும் சிறிது நெய் சேர்த்து கிளறவும்.
  • வாணலியில் ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
  • கலர் எதுவும் தேவையில்லை. பீட்ரூட் வாங்கும்பொழுதே தோலை கிள்ளிப் பார்த்து வாங்கலாம்.
Category: