Bama Samayal

பீர்க்கங்காய் கூட்டு / Peerkangaai Koottu

Bama Narasimhan
Recipe by
Comments Off on பீர்க்கங்காய் கூட்டு / Peerkangaai Koottu

பீர்க்கங்காய் கூட்டு

 

தேவையான பொருட்கள் :

 

து.பருப்பு                                  : 100 கிராம்

தேங்காய் துருவல்             : 1/4 மூடி

சீரகம்                                         : 1 டி ஸ்பூன்

ப.மிளகாய்                               : 2 to 3 Nos (அவரவர் காரத்திற்கேற்ப)

கடுகு                                          : 1 டி ஸ்பூன்

கருவேப்பிலை                     : 1 ஆர்க்கு

எண்ணை                                 : 1 டி ஸ்பூன்

பீர்க்கங்காய்                            : 3 Nos (தோல் சீவி சிறிய துண்டங்களாக நறுக்கவும்)

உப்பு                                            : ருசிக்கேற்ப

 

செய்முறை :

 

  • து.பருப்பை 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  • பீர்க்கங்காயுடன் 1 கரண்டி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  • பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  • வெந்த காயுடன் பருப்பு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
  • பிறகு கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.