Bama Samayal

பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal

Bama Narasimhan
Recipe by
Comments Off on பீர்க்கங்காய் தோல் துகையல் / Peerkangaai Thol Thuvayal

பீர்க்கங்காய் தோல் துகையல்

 

தேவையான பொருட்கள் :

 

மிளகாய் வற்றல்                   : 5 Nos

உ.பருப்பு                                    : 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்                          : 1 சிறு துண்டு

உப்பு                                             : ருசிக்கேற்ப

புளி                                               : சிறிய கொட்டை பாக்கு அளவு

பீர்க்கங்காய் தோல்              : 3 காயில் இருந்து எடுத்தது

எண்ணை                                  : 1 1/2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு மிளகாய் வற்றல், உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து எடுக்கவும்.
  • அதே வாணலியில் பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது வதங்கியவுடன் உப்பு சேர்க்கவும்.
  • நன்றாக வதக்கி ஆறியவுடன் புளியையும் சேர்த்து மிக்சியில் துகையலாக அரைக்கவும்.