Bama Samayal

புட்டு/Puttu

Bama Narasimhan
Recipe by
Comments Off on புட்டு/Puttu

புட்டு

தேவையான பொருட்கள் :

ப.அரிசி : 2 ஆழாக்கு (அல்லது டம்ளர்)
பாகு வெல்லம் : 2 1/4 ஆழாக்கு (பொடித்தது)
ஏலக்காய் : 4 Nos. (பொடிக்கவும்)
தேங்காய் : 1/2 மூடி (பல் பல்லாக நறுக்கவும்)
கேசரி பவுடர் (or) மஞ்சள் பொடி : 1/4 டி ஸ்பூன்
முந்திரி : தேவையான அளவு
நெய் : 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

– அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்
– நீரை வடித்து ஒரு துணியில் பரத்தி வைத்து மிக்சி அல்லது மாவு மிஷினில் மாவாக அரைக்கவும்.
– மாவை வறுக்கவும் (கோல இழை விழுவது போல), பிறகு சலிக்கவும்.
– ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அதில் 1 கல் உப்பு, கலர் பவுடர் போடவும்.
– கை பொறுக்கும் அளவு சூடானவுடன் இறக்கவும்.
– சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் விட்டு பிசறவும்.
– பிறகு மாவு சல்லடையில் (பெரிய கண் உள்ள சல்லடையில்) சிறிது சிறிதாக மாவை போட்டு தேய்த்து சலிக்கவும். (ஈரமாவாக இருப்பதால் தேய்த்து தான் சலிக்கனும்)
– மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி பானையில் வைத்து வேக விடவும்.
– வெந்த மாவு கையில் ஒட்டாது.
– தாம்பாளத்தில் கொட்டினால் எறும்பு ஊறுவது போல் இருக்கும் (அதுதான் பதம்).
– வெல்லத்தில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும்.
– நெய்யில் தேங்காய், முந்திரி வறுத்து வெந்த புட்டு மாவில் சேர்க்கவும்.
– பாகு முற்றியவுடன், கீழே இறக்கி மாவை அதில் கொட்டி ஏலப்பொடி சேர்த்து கிளறவும்.
– கொஞ்சம் சேர்ந்தாற்போல் இருக்கும், ஆற ஆற உதிரியாகி விடும்.
– சுவையான புட்டு ரெடி
குறிப்பு : பாகை தண்ணீரில் விட்டு உருட்டினால் உருண்டு வரும். அடித்தால் டக்கென்று கேட்கும். பாகுபதம் அதுதான்.

Category: