Bama Samayal

புதினா புலாவ் / Pudhina Pulao

Bama Narasimhan
Recipe by
Comments Off on புதினா புலாவ் / Pudhina Pulao

புதினா புலாவ்

 

தேவையான பொருட்கள் :

 

பாசுமதி அரிசி                           : 2 கப்

தேங்காய் பால்                         : 1/2 கப்

கொத்தமல்லி தழை              : 1/2 கட்டு

புதினா                                           : 2 கட்டு

ப.மிளகாய்                                  : 4 Nos

இஞ்சி                                            : 1 துண்டு

பூண்டு                                           : 6 பல்

தேங்காய் துருவல்                 : 4 டி ஸ்பூன்

பட்டை                                          : 2 Nos

ஏலக்காய்                                    : 2 Nos

கிராம்பு                                         : 2 Nos

வெங்காயம்                               : 2 Nos  (நீளமாக நறுக்கவும்)

எண்ணை                                    : 4 டி ஸ்பூன்

உப்பு                                               : தேவையான அளவு

எலுமிச்சை ஜூஸ்                  : 1 டி ஸ்பூன்

 

விழுதாக அரைக்கவும்  – புதினா, இஞ்சி, பூண்டு, தேங்காய், ப.மிளகாய் & கொத்தமல்லி தழை.

 

செய்முறை :

 

  • ஒரு குக்கரில் எண்ணை விட்டு பட்டை, ஏலம், கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின்னர் தேங்காய் பால், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை களைந்து சேர்க்கவும்.
  • உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி குக்கரை மூடி 1 விசில் விட்டு, சிம்மில் 2 நிமிடம் வைத்து இறக்கவும்.

 

Note : தேங்காய் பால் இல்லாவிட்டால் சாதாரண பால் கூட சேர்க்கலாம்.

Category: