Bama Samayal

புளியோதரை / Puliyodharai – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

Bama Narasimhan
Recipe by
Comments Off on புளியோதரை / Puliyodharai – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

புளியோதரை – சுமங்கலி பிரார்த்தனை தொகுப்பு

தேவையான பொருட்கள் :

புளி                                  : 2 எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல்     : 15 Nos.
மஞ்சள் பொடி            : 2 டி ஸ்பூன்
கடுகு                              : 2 டி ஸ்பூன்
உளுத்தம்பருப்பு       : 1 சிறிய கப்
கடலை பருப்பு           : 1 சிறிய கப்
வேர்கடலை               : தேவையான அளவு
உப்பு                                : தேவைகேற்ப
பெருங்காயம்             : 1 சிறிய கட்டி
கருவேப்பிலை          : தேவைகேற்ப
அரிசி                               : தேவைகேற்ப

வறுத்து பொடிக்க :- (சிறிது எண்ணை விட்டு வறுத்து பொடிக்கவும்)

மிளகாய் வற்றல்       : 10 Nos.
தனியா                            : 1 சிறிய கப்
எள்                                    : 1 சிறிய கரண்டி
வெந்தயம்                     : 1 டேபிள் ஸ்பூன்
எண்ணை                       : தேவையான அளவு

செய்முறை :

  • ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் போடவும்.
  • கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் 15 Nos. கிள்ளிபோட்டு வறுக்கவும்.
  • சிவந்தவுடன் புளியை 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து சேர்க்கவும்.
  • மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • சிறிது கெட்டியானவுடன் பொடித்த பொடி, வேர்கடலை சேர்த்து கெட்டியானவுடன் இறக்கவும்.
  • போதுமான அளவு சாதத்தை (ratio – 1/4 கிலோ அரிசி வடித்த சாதத்துக்கு 2 டேபிள் ஸ்பூன் புளி காய்ச்சல்) வடித்து ஆறவைத்து, நல்லெண்ணெய் விட்டு புளி காய்ச்சல் சேர்த்து கலந்தால் புளியோதரை ரெடி.