Bama Samayal

புளி உப்புமா (புளிமா) / Puli Uppumaa

Bama Narasimhan
Recipe by
Comments Off on புளி உப்புமா (புளிமா) / Puli Uppumaa

புளி உப்புமா (புளிமா)

 

தேவையான பொருட்கள் :

 

அரிசி மாவு                   : 1 டம்ளர்

புளி                                   : 1 எலுமிச்சை அளவு (1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்)

கடுகு                               : 1 டி ஸ்பூன்

உ.பருப்பு                        : 1 டி ஸ்பூன்

பெருங்காயம்              : 1 சிறு துண்டு

உப்பு                                 : தேவையான அளவு

மோர் மிளகாய்           : 8 to 10 Nos. (அவரவர் காரத்திற்கேற்ப)

எண்ணை                       : 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்                         : 1/2 டம்ளர்

 

செய்முறை :

 

  • புளி தண்ணீருடன் அரிசி மாவு, உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மோர் மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு கலந்த மாவை அதில் சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.
  • மாவு வெந்து கையில் ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
  • அப்பொழுது இறக்கவும். சுவையான புளி உப்புமா ரெடி.