Bama Samayal

மசால் வடை / Masal Vadai

Bama Narasimhan
Recipe by
Comments Off on மசால் வடை / Masal Vadai

மசால் வடை

 

தேவையான பொருட்கள் :

 

க.பருப்பு                          : 1 டம்ளர் (ஊறவைக்கவும்)

ப.மிளகாய்                     : 3 Nos.

மிளகாய் வற்றல்       : 3 Nos.

உப்பு                                  : ருசிக்கேற்ப

வெங்காயம்                  : 2 Nos. (பொடியாக நறுக்கவும்)

சோம்பு                            : 1 டி ஸ்பூன்

இஞ்சி                               : 1 சிறிய துண்டு

கருவேப்பிலை           : 2 ஆர்க்கு

எண்ணை                       : வடை தட்டி எடுப்பதற்கு

 

செய்முறை :

 

  • ஊறிய கடலை பருப்பில் சிறிது எடுத்து தனியாக வைக்கவும்.
  • மீதியில், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் உப்பு, இஞ்சி, சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • பிறகு, வெங்காயம், எடுத்து வைத்த முழு பருப்பு சேர்த்து பிசையவும், கருவேப்பிலை கிள்ளி போடவும்.
  • எண்ணையை காய வைத்து வடைகளை தட்டி போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
  • பிடித்தவர்கள் புதினா இலையையும் நறுக்கி சேர்க்கலாம்.