Bama Samayal

மலாய் கோப்தா / Malai Koftha

மலாய் கோப்தா

 

கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :

 

வெங்காயம்          : 3 Nos. (விழுதாக அரைக்கவும்)

தக்காளி                  : 3 Nos. (வெந்நீரில் போட்டு தோலுரித்து அரைக்கவும்)

காரப்பொடி           : 2 டி ஸ்பூன்

உப்பு                        : ருசிகேற்ப

எண்ணை             : 2 குழி கரண்டி

தண்ணீர்               : 2 டம்ளர்

ப்ரெஷ் க்ரீம்       : 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை – கிரேவி :

 

  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • நிறம் மாறியவுடன் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பச்சை வாசனை போனவுடன் காரப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • எண்ணை பிரிந்து வரும்பொழுது இறக்கவும்.

 

கோப்தா செய்ய தேவையான பொருட்கள் :

 

பீன்ஸ்                                     : 20 Nos (நறுக்கவும்)

காரட்                                       : 3 Nos. (நறுக்கவும்)

காலிப்ளவர்                         : 1 சிறிய கப் (பூவாக எடுத்தது)

பொட்டுக்கடலை மாவு : 2 டேபிள் ஸ்பூன்

மைதா                                    : 1 சிறிய கப்

ப்ரெட் க்ரம்ஸ்                     : 1 சிறிய கப்

எண்ணை                              : பொரிப்பதற்கு தேவையான அளவு

உப்பு                                         : ருசிக்கேற்ப

பச்சை பட்டாணி               : 1 சிறிய கப்

காரப்பொடி                          : 1 டி ஸ்பூன்

 

செய்முறை – கோப்தா :

 

  • காய்கறிகள் மற்றும் பட்டாணியை ஒரு குக்கரில் 1 விசில் விட்டு எடுத்து வடிகட்டி காரப்பொடி, உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசையவும்.
  • லூசாக இருந்தால் போட்டு கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக (சிறிய எலுமிச்சை அளவு) உருட்டிக்கொள்ளவும்.
  • மைதா மாவில் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
  • உருண்டையை மைதா கரைசலில் முக்கி ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • பிறகு கிரேவியில் போட்டு மேல ப்ரெஷ் க்ரீம் போட்டு பரிமாறவும்.
Category:

Leave a Review