Bama Samayal

மாஹாளி / Maahaali (Sarasaparilla)

Bama Narasimhan
Recipe by
Comments Off on மாஹாளி / Maahaali (Sarasaparilla)

மாஹாளி

 

தேவையான பொருட்கள் :

 

மாஹாளி கிழங்கு                 : 1 கிலோ

எலுமிச்சம் பழம்                     : 8 to 10 Nos.

மிளகாய் பொடி                        : 3 to 4 டேபிள் ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)

உப்பு                                               : 200 கிராம்

மஞ்சள் பொடி                           : 1டிஸ்பூன்

(பிடித்தால் கடுகுப்பொடி சிறிது போடலாம்)

 

செய்முறை :

 

  • மாஹாளி கிழங்கை தண்ணீரில் போட்டு 1 மணி நேரம் கழித்து தோலை ஒரு peelar ஆல் சீவவும்.
  • பிறகு நடுவில் ஒரு வேர் போல் இருக்கும், அதை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும், இல்லாவிட்டால் கருத்து விடும்.
  • ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து மாஹாளியை தண்ணீரில் இருந்து பிழிந்து இந்த கலவையுடன் சேர்க்கவும்.
  • குலுக்கி நன்றாக மூடி வைக்கவும். தினமும் குலுக்கவும்.
  • 4 நாள் கழித்து உப்பு கரைந்து நீர் விட்டுக்கொள்ளும்.
  • ஊற ஊற நன்றாக இருக்கும்.
  • சிலர் (தயிரில் கொஞ்சமாக) கலந்தும் சாப்பிடுவார்கள்.
  • மாவடு போல் அரைத்தும் விடலாம் (மிளகாய், கடுகு, மஞ்சள்). வருஷத்திற்கு கெடாது.

– : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : — : – : –

Maahaali pickle

 

Ingredients :

 

Mahali kizhangu (Sarasaparilla)        : 1 Kg.

Ripe lemon                                              : 8 to 10 Nos.

Red chilly powder                                   : 3 to 4 table spoons

Salt                                                             : 200 grams

Turmeric powder                                    : 1 teaspoon

Mustard seeds powder (optional)       : 1 teaspoon

 

Method:

 

  • Soak the mahali in water for an hour
  • Peel the skin using a peeler. There would be one strand in the middle of mahali (resembling the root). Remove this and cut into small pieces. Keep the cut pieces in water else they change color and may darken
  • Extract the juice from the lemons and keep aside
  • In a vessel, add salt, turmeric powder, red chilly powder, lime juice and mix well.
  • Add the drained mahali into the above mixture and mix well
  • Place a lid and keep aside. Mix well every day without hand/ladle
  • After four days, the salt would have solved and water would be left out.
  • The pickle gets tastier as it shake more
  • Some people like to add a spoon of this pickle in a bowl of curd. This would taste like raitha.
  • This pickle does not spoil even for a year