Bama Samayal

மிளகு குழம்பு / Milagu Kuzhambu

Bama Narasimhan
Recipe by
Comments Off on மிளகு குழம்பு / Milagu Kuzhambu

மிளகு குழம்பு

 

தேவையான பொருட்கள் :

 

புளி                                      : 1 எலுமிச்சை அளவு

உப்பு                                    : தேவையான அளவு

வெல்லம்                          : 1 நெல்லிக்காய் அளவு

கடுகு                                   : 1 டி ஸ்பூன்

நல்லெண்ணெய்           : 1 குழி கரண்டி

 

வறுத்துக்கொள்ளவும் :

 

மிளகு                                : 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு         : 1 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு              : 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

  • வறுத்த மிளகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றுடன் உப்பு, புளி, சேர்த்து நைசாக மிக்சியில் அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிக்சியில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு அலம்பி அரைத்த விழுதுடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளிக்கவும்.
  • பிறகு, கரைத்து வைத்திருக்கும் குழம்பை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு வெல்லம் சேர்த்து இறக்கவும்.
  • விருப்பமுள்ளவர்கள் பூண்டு உரித்து வதக்கி குழம்புடன் சேர்க்கலாம்.