Bama Samayal

பொரித்த குழம்பு/Poritha Kuzhambu

Bama Narasimhan
Recipe by
Comments Off on பொரித்த குழம்பு/Poritha Kuzhambu

முருங்கைக்காய் பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள் :

து.பருப்பு : 100 கிராம்
மஞ்சள் பொடி : சிறிது
சாம்பார் பொடி : 2 டி ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : சிறிது
மிளகு : 1 டேபிள் ஸ்பூன்
உ.பருப்பு : 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் : 1/4 மூடி
கடுகு : 1 டி ஸ்பூன்
முருங்கைக்காய் : 2 அல்லது 3
எண்ணை : தேவையான் அளவு
கருவேப்பிலை : 1 கொத்து

செய்முறை :

– துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
– முருங்கைக்காயை சிறிது தண்ணீரில் துண்டங்களாக நறுக்கி வேக வைக்கவும்.
– பிறகு சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து இன்னும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
– சிறிது எண்ணை விட்டு உ.பருப்பு, மிளகு வறுத்து தேங்காயுடன் கரகரப்பாக அரைக்கவும்.
– கொதித்த குழம்புடன் வெந்த துவரம்பருப்பு அரைத்த விழுது சேர்த்து கொதித்தவுடன் இறக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.