Bama Samayal

மோர் கூழ் (களி) / More Kali

Bama Narasimhan
Recipe by
Comments Off on மோர் கூழ் (களி) / More Kali

மோர் கூழ் (களி)

 தேவையான பொருட்கள் :

 

அரிசி மாவு                   : 1 டம்ளர்

மோர்                               : 2 டம்ளர்

தண்ணீர்                         : 1/2 டம்ளர்

கடுகு                                : 1 டி ஸ்பூன்

எண்ணை                       : 4 டேபிள் ஸ்பூன்

உ.பருப்பு                         : 2 டி ஸ்பூன்

பெருங்காயம்               : 1 சிறிய துண்டு ‘

உப்பு                                  : ருசிகேற்ப

மோர் மிளகாய்            : 7 to 8 Nos (அவரவர் காரத்திற்கேற்ப)

 

செய்முறை :

 

  • அரிசி மாவுடன், மோர், தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்)
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளிக்கவும்.
  • பிறகு மோர் மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
  • உ.பருப்பு சேர்த்து சிவந்தவுடன் பெருங்காயம் சேர்க்கவும்.
  • கரைத்த மாவை விட்டு நிதானமான தீயில் வேக விடவும்.
  • வாணலியில் ஒட்டாமல் மாவு சுருண்டு வரும்.
  • கையிலும் ஒட்டாது. அப்பொழுது இறக்கவும்.
  • வெந்த மாவு சிறிது நிறமும் மாறும்.