Bama Samayal

மோர் மிளகாய் / More Milagaai

Bama Narasimhan
Recipe by
Comments Off on மோர் மிளகாய் / More Milagaai

மோர் மிளகாய்

 தேவையான பொருட்கள் :

தஞ்சாவூர் குடை மிளகாய்            : 1 கிலோ (சிறியது)

தயிர்                                                          : 1/2 லிட்டர்

உப்பு                                                           : 1 1/4 கைப்பிடி

(தயிர் மற்றும் உப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போடவும்)

 

2 நாள் கழித்து ஊறவைத்து அரைக்கவும் :

உ.பருப்பு                                           : 1 ஸ்பூன்

வெந்தயம்                                        : 1 ஸ்பூன்

 

செய்முறை :

  •  குடை மிளகாயை நன்றாக அலசி வடியவிடவும்.
  • பிறகு ஒரு fork ஆல் குத்தி குத்தி தயிர், உப்பு கலவையில் போடவும்.
  • 2 நாள் கழித்து உ.பருப்பு, வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து மிளகாய், தயிர் கலவையில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பிறகு 4 நாள் கழித்து மிளகாயை மட்டும் எடுத்து காய வைக்கவும்.
  • மாலை தயிரில் போடவும்.
  • இது போல் தயிர் வத்தும் வரையில் போட்டு போட்டு காய வைத்து கலகலவென ஆனவுடன் எடுத்து வைக்கவும்.
  • மிளகாயை குத்தாவிட்டால் வறுக்கும் பொழுது முழு மிளகாய் வெடிக்கும்.