Bama Samayal

ரவா தோசை/Rava Dosai

Bama Narasimhan
Recipe by
Comments Off on ரவா தோசை/Rava Dosai

ரவா தோசை

தேவையான பொருட்கள் :

சிரோட்டி ரவை               : 1 டம்ளர்
அரிசி மாவு                        : 1/2 டம்ளர்
தயிர்                                     : 1 கப்
உப்பு                                      : ருசிகேற்ப
சீரகம்                                    : 1 டி ஸ்பூன்
கடுகு                                     : 1 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி       : 1 டி ஸ்பூன்
எண்ணை                            : தேவையான அளவு

தேவையானவர்கள் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்க்கலாம்.

செய்முறை :

  • தயிரை மத்தால் சிலுப்பி விட்டு அதில் ரவை, அரிசி மாவு, உப்பு, சீரகம், பெருங்காயம், சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • ஒரு 15 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கடுகை தாளித்து மாவில் கொட்டி தேவையான அளவில் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
  • தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைக்கவும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல்லை போட்டு, காய்ந்தவுடன், மாவை கல்லில் விட்டு சுற்றிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைத்து மொறு மொறுப்பாக எடுத்தால் ரவா தோசை ரெடி.

குறிப்பு : மாவை கல்லில் விட்டு கரண்டியால் இழுக்க கூடாது, அந்த அளவு மாவு Thin ஆக இருக்க வேண்டும்.