Bama Samayal

ராஜ்மா மசாலா / Rajma Masala

Bama Narasimhan
Recipe by
Comments Off on ராஜ்மா மசாலா / Rajma Masala

ராஜ்மா மசாலா

 

தேவையான பொருட்கள் :

 

ராஜ்மா                                             : 1 கப் (3 Hours ஊறவைக்கவும்)

எண்ணை                                       : 3 டி ஸ்பூன்

வெங்காயம்                                  : 2 Nos  (நறுக்கி வதக்க)

தக்காளி                                          : 2 பொடியாக நறுக்கவும்

சீரகம்                                               : 1 டி ஸ்பூன்

பச்சை மிளகாய்                         : 1 No (கீறவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட்             : 1 டி ஸ்பூன்

மஞ்சள் பொடி                             : 1/2 டி ஸ்பூன்

மிளகாய் பொடி                           : 2 to 3 டி ஸ்பூன்

தனியா பொடி                              : 2 டி ஸ்பூன்

உப்பு                                                  : தேவையான அளவு

தண்ணீர்                                         : சிறிது

சர்க்கரை                                        : 2 டி ஸ்பூன்

கரம் மசாலா பொடி                  : 2 டி ஸ்பூன்

கொத்தமல்லி தழை                 : 1 கைப்பிடி

 

செய்முறை :

 

  • ஒரு குக்கரில் ஊறிய ராஜ்மா சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை சேர்த்து சீரகம் தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து golden brown கலர் வரும் வரை வதக்கவும். தக்காளி சேர்க்கவும்.
  • பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
  • நன்கு வதங்கி பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கி, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
  • கொதி வந்தவுடன் உப்பு சேர்த்து வெந்த ராஜ்மா (தண்ணீருடன்) சேர்க்கவும்.
  • நன்றாக கொதித்து எண்ணை பிரியும். சர்க்கரை & கரம் மசாலா பொடி சேர்த்து இறக்கி கொத்தமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
Category: